“அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” – ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து!

Published by
Edison

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப் படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதற்கிடையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்”, என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில்,அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பான பிறந்தநாள் வாழ்த்து குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:

“இன்று தனது 72-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், தமிழ்த் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவரும், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவரும், சூப்பர் ஸ்டார்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திரு. ரஜினிகாந்த அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு. ரஜினிகாந்த் அவர்கள் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

4 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

6 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

7 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

8 hours ago

பலுசிஸ்தான் ஐஇடி குண்டுவெடிப்பில் 7 பாகிஸ்தான் வீரர்கள் பலி.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…

8 hours ago

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

9 hours ago