முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம்;ஒப்படைக்க கோரி தீபா,தீபக் மனு!

சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா,தீபக் மனு அளித்துள்ளனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் எனும் வீட்டில் வசித்து வந்தார். இந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்திருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு கையகப்படுத்தி, அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
ஆனால்,இதனை எதிர்த்து போயஸ் கார்டனில் குடியிருப்போர் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,இந்த வழக்கில் கடந்த நவ.24 ஆம் தேதி தீர்ப்பு வெளியாகியது.அதன்படி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கிய சட்டம் செல்லாது எனவும், மூன்று வாரத்தில் வேதா நிலையம் தீபா மற்றும் தீபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில்,போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலைய நினைவு இல்லத்தின் சாவியை தங்களிடம் ஒப்படைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் தீபா,தீபக் மனு அளித்துள்ளனர்.
இதற்கு பதில் அளித்துள்ள சென்னை மாவட்ட ஆட்சியர்,அரசு தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசித்துவிட்டு,இது தொடர்பாக முடிவெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025