டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு...!மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்...!  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம்  வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவம்பர் 21 ஆம் தேதி ) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.