"டெல்லி கணேஷ் மறைவு வேதனை அளிக்கிறது"! தவெக தலைவர் விஜய் இரங்கல்!

சீனியர் நடிகரான டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Delhi Ganesh - TVK Vijay

சென்னை :தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவரான டெல்லி கணேஷ், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் சினிமா முற்றிலும் சோகத்தில் இருந்து வருகிறது. திரைத்துறையில் மட்டுமே 40 வருடங்கள் பயணித்து, பல கதாபாத்திரங்கள் மூலம் மக்களிடம் நீங்கா இடம் பிடித்து மனதளவில் வாழ்ந்து வருகிறார்.

அன்னாரது மறைவிக்கு திரைப்பிரபலன்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பலரும் சமூக தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, முன்னதாக தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.

தற்போது, தவெக கட்சித் தலைவரான விஜய் அவரது எக்ஸ் வளைபக்கத்த்தில் டெல்லி கணேஷுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், “மூத்த நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது.

40 ஆண்டுகளுக்கு மேலாக 400 க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் பதிவிட்டு அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

unknown node