பத்து தல படத்தை பார்க்க வந்த நரிக்குறவர்களுக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதற்கு கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் சிம்பு நடிப்பில் நேற்று வெளியான ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சிக்கு, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் டிக்கெட் எடுத்து திரையரங்கிற்குள் வந்துள்ளனர். ஆனால், டிக்கெட் இருந்தும் இருவரை ரோகிணி திரையரங்க ஊழியர்கள் உள்ளே விட மறுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், பலரும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டனங்களை தெரிவித்தனர். இதனையடுத்து, நரிக்குறவர்களை படம் பார்க்க அனுமதிக்காத புகாரில் ரோகிணி திரையரங்க பணியாளர் குமரேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும்ம், நெற்றிலிருந்து ட்விட்டரில்#BoycottRohiniTheatreஎன்ற கேஸ்டெக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. தற்போது, ரோஹிணி திரையரங்க விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பிய பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
unknown node