வாக்காளருக்கு பணம் கொடுத்தாரா முதலமைச்சர்? அதிமுக தரப்பில் விளக்கம்

முதலமைச்சர்  பணம் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவி வருகிறது.

முதலமைச்சர்  பணம் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவி வருகிறது.

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 18-ஆம் தேதி) நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில்  நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

unknown node

அப்போது அங்கிருந்த வாழை வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடம் வாக்கு கேட்டார் முதலமைச்சர் பழனிச்சாமி.அந்த சமயம் அந்த பெண் முதலமைச்சருக்கு  அவரது  கடையிலிருந்து வாழைப்பழங்கள் வழங்கினார் .ஆனால் முதலமைச்சர்  வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டு அதற்கு  காசு கொடுத்தார்.ஆனால்  முதலமைச்சர்  பணம் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாகப் பரவியது.

unknown node

இதன் பின்னர் அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.அதில், வாழைப்பழம் வியாபாரம் செய்யும் பெண் கொடுத்த வாழைப்பழங்களை  பெற்று கொண்டு அதற்குறிய  பணத்தை முதலமைச்சர் கொடுத்தார்.ஆனால் அது  ஓட்டுக்காக கொடுக்கப்பட்ட பணம் இல்லை  என்றும் தெரிவிக்கப்பட்டது.