நெல்லை வேட்பாளரை மாற்றிய தினகரன்! மைக்கேல் ராயப்பன் போட்டி

Dinakaran who changed the Nellai candidate!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்  நடைபெற உள்ளது.மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும்    நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்பின்னர் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக.

இந்நிலையில் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் தினகரன் ஓசூர் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.அதில் ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். புதுச்சேரி மக்களவை தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.அதேபோல் நெல்லை மக்களவை தொகுதி வேட்பாளராக ஞான அருள்மணிக்கு பதில் மைக்கேல் ராயப்பன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.