தினகரனை கைவிட்ட குக்கர்!தினகரனுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

this news given information about Dinakaran's gift box set aside by the Election Commission

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டிடிவி.தினகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அதில் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று வாதிட்டது .கட்சி பதிவு செய்யப்படாததால் சின்னம் ஒதுக்க முடியாது.

எனவே தினகரனின்  வேட்பாளர்களை சுயேச்சைகளாகத்தான் பார்க்க முடியும். அதனால், நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு பொதுச் சின்னத்தை ஒதுக்க முடியாது. அதேபோல், இடைத்தேர்தலுக்கும் ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டது தேர்தல் ஆணையம்.

அதுபோல்  இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது.பின்னர் ஆணையம் ஆவணங்களை தாக்கல் செய்தது.

unknown node

இதன் பின்னர் நடைபெற்ற  விசாரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குக்கர் சினத்தை ஒதுக்கி உத்தரவிட முடியாது என தீர்ப்பளித்தனர்.இந்நிலையில் எங்கள் தரப்பிற்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என தினகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் உச்சநீதிமன்றம்  ஏதேனும் ஒரு சின்னத்தை பொதுச் சின்னமாக ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட்டது. இதனையடுத்து,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் குக்கர், விசில், ஆட்டோ ரிக்ஷா, ஆப்பிள், டிராக்டர் உள்ளிட்ட  சின்னங்களில் ஏதாவது ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது.

ஆனால் இதனை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.மேலும்  தேர்தல் ஆணையம் அளிக்கும்  சின்னங்களில் இருந்து ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்களில் ஒன்றான பரிசுப் பெட்டி சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தேர்வு செய்தது. இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.