செல்லாத 5 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி..! எந்த ஊரப்பா இது ?

உலகளவில் இன்று(அக்.16) உணவு தினமாக கொண்டாடப்படுகிறது. உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பிரியாணி கடையில் அற்புதமான அறிவிப்பை அறிவித்தனர். அதாவுது “செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வரும் முதல் 100 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என அறிவித்தனர். இந்த சேவை மதியம் 12 மணியளவில் தொடங்கும் என்றபோதிலும் காலை 10 மணியளவிலே கடைக்கு முன் கூட்டம் அலை மோதியது.
இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் கூறுகையில், பழமையை புதுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார். இது போன்று பழமையான விஷயங்களை சேகரிப்பது தமிழரின் பண்பாட்டை பாதுகாப்பதற்கு சமம் என்றுள்ளார். இது ஒரு விழிப்புணர்வு முயற்சி தான் என்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025