திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மேம்பாலத்தில் அரசு பேருந்தின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அரசு பேருந்து தீ பிடித்தது. சமபவ இடத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
இன்று திண்டுக்கல் , ஓட்டன்சத்திரம் அருகே மேம்பாலத்தில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்துள்ளனர்.
இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி அரசு பேருந்து மீது மோதியது. விபரீதமாக பேருந்தின் டீசல் டேங்க் இருக்கும் பக்கம் இருசக்கர வாகனம் மோதியதால் பேருந்து உடனடியாக தீ பிடித்தது.
இதில், சம்பவ இடத்திலேயே பைக்கில் வந்த 3 பேரில் ஒருவரான பிரவீன் எனும் 12ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார். மீதம் 2 பேர் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் தீ பற்றியதும் உடனடியாக பயணிகள் சுதாரித்துக்கொண்டு கீழே இறங்கியதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.