திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியீடு!!முழு விவரம் இதோ...

This news gives information about DMK and Alliance Parties List of Competing Blocs

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக கூட்டணி கட்சிகள்   இடையே  பேச்சுவார்த்தை  நடைபெறுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு  எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் பின்  திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் இன்று  வெளியிடப்படுவதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அண்ணா அறிவாலயத்திற்கு சென்றனர்.பின்னர்  திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த விபரம்  வெளியானது.

unknown node

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்  திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி ஆகும்.

unknown node

மக்களவை தேர்தலில் ஈரோட்டில் மதிமுக போட்டியிடுகிறது.விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்  சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகும்.: ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது.

unknown node

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சி  கோவை மற்றும் மதுரையில் போட்டியிடுகிறது.இந்திய கம்யூனிஸ்ட்  திருப்பூர் மற்றும் நாகையில் போட்டியிடுகிறது.நாமக்கலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.பெரம்பலூரில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது என்று திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.