3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும்

அதிமுக கொறடா சபாநாயகரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய 3 எம்.எல். ஏக்களுக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

மேலும் சபாநாயகர் அனுப்பிய  நோட்டீசுக்கு 7 நாட்களில்  எம்.எல்.ஏ.க்கள் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் 3 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் தனபால்  நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ள நிலையில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு கொடுக்கப்பட்டுள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என திமுக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளது.

3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு