எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது??காங்கிரஸ்,விசிகவிற்கு திமுக அழைப்பு !!

This news gives information about DMK calls for Congress and Vigika to contest in which constituencies

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

திமுக கூட்டணியில்  காங்கிரஸ்  -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  – 2, இந்திய கம்யூனிஸ்ட்  – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக திமுகவுடன் முதற்கட்டமாக  சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி மார்ச் 9 ஆம் தேதி  சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்நிலையில் இன்று எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ், விசிகவுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.  அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது