சேலம் : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,“திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது; அது தான் இப்போ நடக்குது தமிழ்நாட்டில்” என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது“2011ல் பிரதான எதிர்க்கட்சியாகக்கூட வரமுடியாத கட்சிதான் திமுக. கருணாநிதி இருக்கும்போதே திமுகவால் எதிர்க்கட்சியாக வர முடியவில்லை. 2011 முதல் 2021 வரை எத்தனை தோல்விகளை நீங்கள் சந்தித்தீர்கள்?டாஸ்மாக் ஊழல் உங்களுக்கு நல்லா தெரியும். பத்து ரூபாயில. யாருடைய பேரு? சிந்திச்சு பாருங்க. இன்றைக்கு புதுசு புதுசா வித்தைகளைக் கண்டுபிடிச்சு ஊழல் செய்வதிலே ஊழல் மன்னன் யாரு?இன்றைக்கு நல்லது செய்வதற்காக இன்றைக்கு இருக்கின்ற அமைச்சரும் சரி, அந்த ஒரு கட்சியுடைய தலைவரும் சரி ஈடுபடுவானா? ஆனா எப்படி எல்லாம் ஊழல் செய்ய வேண்டும், எப்படி எல்லாம் கொள்ளையடிக்க வேண்டும் அதுல திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அது தான் இப்ப நடக்குது தமிழ்நாட்டுல.
தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்யல. அதற்கு மாறாக எந்த விதத்துல தமிழ்நாட்டுல எந்தெந்த துறையில எப்படி எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அப்படி கொள்ளையடிக்கும் அரசாங்கம் இன்றைய அரசாங்கம். திமுக அரசாங்கம் என நாம் உணர வேண்டும்.
2 வருஷத்துக்கு முந்தி தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதி அமைச்சர், திமுக கட்சிச் சேர்ந்த திரு. பல்லிவேலு தியாகராஜன் அவர் ஒரு ஆடியோவில் குறிப்பிட்டார். அதில் என்ன சொல்றாரு? திரு. சபரீஸ்வரன் (திரு. ஸ்டாலினுடைய மருமகன் திரு. உதயநிதி அவர்கள்) இரண்டு பேர் முப்பதாயிரம் கோடியை கையிலே வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தடுமாறிக் கொண்டிருப்பதாக ஆடியோ செய்தி.ரெண்டு வருஷத்துக்கு முந்திய முப்பதாயிரம் கோடி இப்போ எத்தனை ஆயிரம் கோடி கொள்ளையடிச்சு இருப்பாங்க. சிந்திச்சு பாருங்க. அண்மையில ராசா ஒரு கருத்தைச் சொன்னாரு. இன்றைய முதலமைச்சருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
திமுகவுடைய துணைப் பொதுச் செயலாளர் திரு. ராசா, முன்னாள் மத்திய மந்திரி, இன்னைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அவர் குறிப்பிடுகிறார். திரு. கருணாநிதி அவர்கள் உடல்நலம் சரியில்லாம வீட்டில் இருந்தபொழுது திரு. ஸ்டாலின் அவர்களை வீட்டுச் சிறையிலே வைத்துள்ளார் என்று யார் சொன்னது? திரு. ராசா அவர்கள் வலைத்தளத்தில் வந்த செய்தி.
இன்னைக்கு திமுக கொக்கரிக்குது. ஏதோ திமுகவுல பலவாய்ந்த கூட்டணி என்று . எந்தப் பலவாய்ந்த கூட்டணியும் கிடையாது. அதுல ஏற்கனவே 2021 ஆண்டு எந்தெந்த கட்சிகள் அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்ததோ அதே கட்சிதான் இப்ப கூட்டணி வைக்குது. ஒருத்தர் தான் போய்ச் சேர்ந்து இருக்காங்க.” எனவும் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கடுமையான விமர்சனம் சேலத்தில் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியது.
