திமுக பேரணிக்கு விளம்பரம் செய்த அதிமுகவுக்கு நன்றி! – மு.க.ஸ்டாலின் பேட்டி!

Default Image
  • திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் நாளை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்த உள்ளன. 
  • அந்த பேரணிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் அவரச மனு கொடுக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் நாளை திமுக தலைமையில் அதன் தோழமை கட்சிகள் பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன.

இந்த போராட்டத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரச வழக்கு போடப்பட்டது. அதில் அனுமதி குறித்து எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பேரணி நடைபெற்றால் அதனை ட்ரோன் கேமிரா மூலம் கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என மட்டும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

இது குறித்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை தோழமை கட்சிகளுடன் பிரமாண்ட பேரணி நடத்த இருக்கின்றோம். இந்த பேரணிக்கு தடை கேட்டு அவரச வழக்கு போட்டு எங்கள் பேரணியை விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி எனவும், அதிமுக சில நபர்களை நீதிபதி வீட்டிற்கே அனுப்பி தடை கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி கூறிவிட்டார். அவருக்கு நன்றி’ என தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்