திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் – வைகோ நம்பிக்கை

Vaiko has said he will form a DMK-led coalition government with more than 200 in the coming assembly elections

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்த பின் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேல் வெற்றி பெற்று திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும் நம்பிக்கை உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் நேரில் சென்று பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளேன். திமுக அளித்த ஊழல் குற்றச்சாட்டு புகார் மனு மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடவடிக்கை எடுக்கவில்லை என்றல் நீதிமன்றத்துக்கு செல்லுவோம் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை “தரகர்கள்” என கூறிவருவதாக குற்றசாட்டியுள்ளார்.