முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்கியது…!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கில் 16-ஆவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித அவர்கள் உரையாற்றினார். அந்த உரையின் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனையடுத்து தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில், 125 சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் என்ன பேச வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025