கோவை நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய இளைஞர்... தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த திமுக எம்.பி ஆ.ராசா.!

நீலகிரி மக்களவை தொகுதி திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கோவை திருப்பூர் பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறுதியாக

DMK MP A Rasa

நீலகிரி மக்களவை தொகுதி திமுக எம்பியும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, கோவை திருப்பூர் பகுதிகளில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இறுதியாக அவிநாசியில் கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டு இன்று காலை கோவை விமான நிலையம் சென்று கொண்டு இருந்தார்.

அவிநாசி – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கணியூர் சுங்கசாவடி அருகே ஆ.ராசா வாகனம் சென்று கொண்டிருந்த போது சாலையில் ஒரு இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி சாலையில் மயக்க நிலையில் இருந்தது தெரியவந்துள்ளளது.

உடனடியாக  தனது காரை விட்டு கிழே இறங்கி அந்த இளைஞரை தனது உதவியாளர்களுடன் மீட்டு அவரை தனது காரில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வைத்துள்ளார். உடன் தன்னுடன் வந்த மருத்துவர் கோகுலையும் அனுப்பி வைத்துள்ளார் ஆ.ராசா. அதன் பிறகு அந்த இளைஞர் உடல் நிலை குறித்து போனில் கேட்டறிந்தார் திமுக எம்பி ஆ.ராசா.