சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் – திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள  நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி  அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்று அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,அரசியல் நோக்கங்களுக்காக புலனாய்வு துறையை தேர்தல் களத்தில் பயன்படுத்துவது அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு ஓர் உதாரணம்  என்று  செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.