‘கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த Dr.பாக்யராஜ் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சென்னை மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய ஊழியர்கள் அவரது உடலை கீழ்பாக்கம் மயானத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு அவரை அடக்கம் செய்ய முடியாமல் போனது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் உட்பட பலர் இதற்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இறந்த உடலில் இருந்து கொரோனா பரவாது என்பதையும், நோய் தொற்று ஏற்படாத வண்ணம் தான் உடல் அடக்கம் செய்யப்படுகிறது என மக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.
இதில் மருத்துவர் பாக்கிராஜ் என்பவர் வீடியோ வாயிலாக கூறுகையில், மக்களின் உயிரை காப்பாற்ற போராடிய மருத்துவரின் உடலுக்கு மரியாதை கூட செலுத்தமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. கல்லை கொண்டு விரட்டி அடிக்கும் அளவிற்கு நாங்கள் என்ன செய்தோம்? இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.’ என கண்ணீர் சிந்த அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.