முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதியை சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவலானது மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,பல மாநிலங்களில் இரவு நேர மற்றும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக மக்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலர் தங்களால் முடிந்த நிதியுதவியை அளித்து வருகின்றார்கள் அந்த வகையில்சன் குழுமத் தலைவர்கலாநிதிமாறன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.10 கோடி நிவாரண நிதியை வழங்கியுள்ளார்.
இதனை சன்டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் “இன்று, சன் டிவி தமிழகத்தின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ .10 கோடியை நன்கொடையாக வழங்கியது” என்று பதிவிட்டுள்ளது.
unknown node