பறக்கும் கேமிராவை கண்டதும் பதறி ஓடும் காதலர்கள்.!

ஊரடங்கை கண்காணிக்க தமிழக போலீசார் ட்ரோன் மூலம் பலவேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். அப்போது திருவள்ளூர் குமிடிபூண்டியில் காட்டுப்பகுதியில் காதலர்கள் பதறி

ஊரடங்கை கண்காணிக்க தமிழக போலீசார் ட்ரோன் மூலம் பலவேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். அப்போது திருவள்ளூர் குமிடிபூண்டியில் காட்டுப்பகுதியில் காதலர்கள் பதறி ஓடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்ற பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

அதனையும் மீறி வெளியில் திரிபவர்களை கண்காணிக்க தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். அந்த ட்ரோன் கேமிராவை கண்டதும் தெறித்து ஓடும் இளைஞர்கள் வீடியோ அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் குமிடிபூண்டி பகுதியில் காட்டு பகுதியில் சுற்றிதிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமிரா இயக்கப்பட்டது. அப்போது, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த காதலர்கள் கேமிராவை கண்டதும் தலையை மறைத்துக்கொண்டு தெறித்து ஓடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.