மணிப்பூரில் இரு பிரிவினர்கள் இடையே கடந்த மே மாதம் தொடங்கிய கலவரமானது, சமீபத்தில் வெளியான பெண்களை இழிவுபடுத்தும் வீடியோ மூலம் அனைவரது பார்வைக்கும் வந்து நெஞ்சை பதறவைத்துள்ளது. அங்குள்ள நிலவரம் அனைவரையும் பதைபதைக்க வைக்கும் அளவுக்கு அந்த வீடியோவில் இரு பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் அமைந்துள்ளது.
தற்போது, மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் பற்றி பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும், கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்.
நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற இழிசெயலை இனி யாரும் செய்ய துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு அம்மாநில முதல்வரிடம் கேட்டுக்கொண்டார்.
unknown node