தென்மாவட்ட மக்களுக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்கவேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத் தொகையை ரூ.15,000 உயர்த்தி வழங்க வேண்டும் என

edappadi palanisamy

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ரூ.6,000 நிவாரணத் தொகையை ரூ.15,000 உயர்த்தி வழங்க வேண்டும் என திர்க்கட்சி தலைவரும், அதிமுக, பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” மிக்ஜாம் புயல் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை எப்படி கையாள்வது என்ற படிப்பினையை பாடமாக எடுத்துக்கொண்டு, தென் மாவட்டங்களுக்கான கனமழை எச்சரிக்கையின்போது இந்த விடியா திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த விடியா திமுக அரசு இந்திய வானிலை ஆய்வு மையத்தை குறை கூறிக்கொண்டு பாதிக்கப்பட்ட நான்கு தென்மாவட்ட மக்களுக்கு உரிய நேரத்தில் தேவையான உதவிகளை செய்யாமல் தட்டிக் கழிப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் கேள்வியால் தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் – வைகோ!

கடந்த வாரம் பெய்த கனமழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டபோது, விடியா திமுக அரசின் முதலமைச்சரோ மக்கள் மீது சிறிதும் அக்கறையின்றி, தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டார்.

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு தற்போது விடியா திமுக அரசு அறிவித்துள்ள 6,000  ரூபாய் நிவாரணத் தொகையை 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், மேலும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை நிவாரணமாக, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும், விடுபடாமல் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என கூறியுள்ளார்.

unknown node