முட்டை விலை 25 காசுகள் குறைந்து 3.80க்கு விற்பனை..!

In the Namakkal region, the farm purchase price of an egg today fell by 25 paise to 3.80 paise.

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 3.80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று ஆம், 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர்.

அதன் படி, நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைந்து 3.80 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைபோல் சென்னையில் 3.90 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து 3 வது நாளாக முட்டை விலை 45 காசுகள் குறைந்துள்ள காரணத்தால் கோழி பண்ணையாளர்கள் சோகத்தில் உள்ளார்கள்.