இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்.! மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்.!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் "கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் முகாம் நடத்தப்பட

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் “கொரோனா பரவலை தடுக்க காய்ச்சல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்றும்  முகக்கவசம் அணிவதில் அரசின் நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும்” என கவனஈர்ப்பு  தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில். எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு இன்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார்.  சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ” தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாக தற்போது 64-ஆயிரம் கொரோனா படுக்கை வசதிகள் உள்ளன.

இந்த வசதி போதாது என்றால் இன்னும் அதிகரிக்கவும் முடியும். அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கொரோனாவை எதிர்கொள்ள அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் பரவும் கொரோனா வைரஸ் உயிர் பறிக்கும் அளவிற்கு வீரியம் கொண்டதல்ல. எனவே,  அதனால் பதற்றப்பட தேவையில்லை.

அண்மையில் இறந்த 2 பேர் கொரோனவால் இறக்கவில்லை அவர்களுக்கு இணை நோய் உள்ளவர்கள். எனவே அதுபோன்ற இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இப்போது பரவும் கொரோனா பரவல் நான்காவது அலை இல்லை. யாரும் அச்சப்பட வேண்டாம். 3வது அலைக்கு பிறகு பொதுமக்கள். யாரும் முகக்கவசம் அணிவதில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு முன்னெச்சிரிகையுடன் இருங்கள் ” என கூறியுள்ளார்.