புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம் ...!அமைச்சர் உதயகுமார்

புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம்  என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம்  என்று  அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் உதயகுமார்  கூறுகையில்,  புயல் காற்று வீச தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம், பாதுகாப்பான இடத்திலேயே இருங்கள். புயல் முழுவதும் கரையை கடந்துவிட்டது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் .போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதேபோல் கஜா புயலின் கண் பகுதி சரியாக 1 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது.அதன்பின் அமைச்சர் உதயகுமார் கூறுகையில், புயலின் வேகம் குறைந்தாலும், புயல் நின்றுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். மீண்டும் காற்று வேகம் எடுக்கும் என்பதால் பாதுகாப்பான இடத்திலேயே இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.