நடிகர் விஜயின் அரசியல் வருகை.? சரத்குமார் பரபரப்பு கருத்து.!

Sarathkumar - Actor Vijay

விஜய் மட்டுமல்ல யாரும் அரசியலுக்கு வர வேண்டும். வரவேண்டாம் என நான் கூற தயாராக இல்லை என சரத்குமார் கூறியுள்ளார். 

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பற்றிய கேள்வி கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அவர் அரசியலுக்கு வரட்டும் , அரசியல் கட்சியாக பதிவு செய்யட்டும் என சிலர் கூறினாலும், விஜயின் அரசியல் வருகை கேள்விகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான நகர்வுகளையும் விஜய் முன்னெடுத்து வருகிறார் என்பதும் நிதர்சனமான உண்மை.

இந்நிலையில் இன்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரும் விஜயின் அரசியல் வருகை பற்றி தனது கருத்தை முன் வைத்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், நடிகர் விஜய் மட்டுமல்ல மற்ற நடிகர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என பலரும் அரசியலுக்கு வரலாம். குறிப்பிட்ட ஒரு நபர் அரசியலுக்கு வர வேண்டும், வர கூடாது என நான் சொல்ல தயாராக இல்லை.  வரும் தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைக்க தயாராக இல்லை. எங்க சேவை மக்களுக்காகனது. அதற்கான இலக்கை நோக்கி பயணிக்கிறோம் என சரத்குமார் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்