ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் -அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், ரஜினிகாந்த் கட்சி தொடங்கினாலும், தொடங்கவிட்டாலும் அனைத்தும் அதிமுகவிற்கு சாதகமாகவே அமையும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்பதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளார். இதுபோன்று, ரஜினி எதிர்காலத்தில் ஆதரவு கொடுத்தால் அது அதிமுகவுக்கு தான் இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்த ரஜினி, தான் கட்சி தொடங்கவில்லை என இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், உடல்நிலை காரணமாகவும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படியும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை, இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் என்ன சேவையை செய்ய முடியுமோ அதை செய்வேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…
சென்னை : ஜூன் 24 முதல் தொடங்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான U-19 இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் 2 ஐபிஎல்…