தேர்வு ஓவர்...நாளை முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.!

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் 12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது.

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் 12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவுபெறுகிறது.

கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி  12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, நாளை முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் இந்த பொதுத்தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி  தொடங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற மே மாதம் தேர்வுகளின் முடிவுகள் வெளியாக உள்ளன. மேலும், பொதுத்தேர்வை எழுதாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் தேர்வு எழுத வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.