ரஜினி, கமல் வரும்போது கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது – விஜய் வசந்த்

ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று மறைந்த கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் பேட்டியளித்துள்ளார்.
தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு காலியாக இருக்கும் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பி காங்கிரஸ் மேலிடத்துக்கு விஜய் வசந்த் விருப்பம் தெரிவித்தார். ஆனால், மேலிடம் இதுவரை எந்த சிக்னலும் கொடுக்கவில்லை. இதனால், தனது தந்தையின் பாணியிலேயே தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அரசியல் செய்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினி, கமல் வரும்போது அவர்களை பார்க்க வேண்டும் என்று தான் கூட்டம் கூடுமே தவிர, அது ஓட்டாக மாறாது என்று மறைந்த எம்.பி.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி ஆரம்பிக்கும் கட்சிக்கு இப்போது நேரம் சரி இல்லை என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025