பட்டாசு ஆலையில் வெடி விபத்து...2 பேர் பலி.. ஒருவர் கைது..!

விளாம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளாம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெடிவிபத்து

சிவகாசி மாவட்டம் அருகே விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமாக தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த பட்டாசு ஆலையில்  50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி செய்து கொண்டு வந்தனர்.

unknown node

வழக்கம்போல இன்று பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பட்டாசு ஆலையில்  ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் தங்கவேல் மற்றும் கருப்பசாமி என்பவர்கள் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஒருவர் கைது

இந்த வெடி விபத்து தொடர்பாக மாரனேரி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த விவகாரத்தில் ஆலை மேற்பார்வையாளர் மம்சாபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பட்டாசு ஆலை உரிமையாளர் பிரவீன் ராஜா தலைமறைவாக உள்ளதால் அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.