பிரபலமான ஓவியர் கொரோனா தொற்றால் காலமானார்…!

Published by
லீனா
  • ஓவியங்களை தத்ரூபமாக வரையக் கூடிய புகழ்பெற்ற ஓவியர் இளையராஜா.
  • கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா காலமானார்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தை சேர்ந்த பிரபலமான ஓவியர் இளையராஜா. இவர் கடந்த வாரம் தனது அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்திற்கு சென்றுள்ளார். திருமணத்திற்கு சென்ற இவர் சில நாட்களுக்குப்பின் சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு உடலில் சளி போன்ற தொந்தரவுகள் காணப்பட்ட நிலையில் நண்பர்களிடம் ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். அவரது குடும்பத்தில் பலருக்கும் கொரானா தொற்று ஏற்பட்ட நிலையில், இளையராஜாவும் சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்றானது நுரையீரல் முழுவதும் பரவியது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

இளையராஜா ஒரு மிகச் சிறந்த ஓவியர். இவருடைய திராவிட பெண்கள் ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும். பெண்களை மிகவும் அழகாக தத்ரூபமாக வரைவதில் கை தேர்ந்தவர் ஆவார். இவரது புகைப்படங்களை பார்க்கும் போது ஓவியமா அல்லது புகைப்படமா என்று சந்தேகப்பட கூடிய அளவுக்கு தத்ரூபமாக வரையும் திறமை கொண்டவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் இருந்து மிகுந்த கவனம் பெற்றவர். இவரது ஓவியங்கள் 2010-ம் ஆண்டு முதல் விகடன் வார இதழில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

16 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago