ரசிகர்கள், நிர்வாகிகள் போயஸ்கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம்- ரஜினிகாந்த்..!

Rajini has told fans and executives not to come to Boise Garden House to congratulate her on her birthday, December 12th.

ரஜினி சாலை மார்க்கமாக பெங்களூரு சென்று அங்கிருந்து ஹைதராபாத் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ரஜினிகாந்த் தனது பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி அன்று வாழ்த்துச் சொல்ல ரசிகர்கள் , நிர்வாகிகள் போயஸ் கார்டன் வீட்டிற்கு வரவேண்டாம் என ரஜினி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 60% காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் 40 சதவீத காட்சிகள் படமாக வேண்டி உள்ளது. இதனால், ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.