விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு நாளை முதல் வழங்கப்படும் – என்எல்சி!

மேலும், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.இது தொடர்பாக,

NLC

சேதப்படுத்தப்பட்ட பயிர்களின் ஏக்கருக்கு இழப்பீடு தொகையாக ரூ.40,000 நாளை முதல் வழங்கப்படும் என என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இதில், விளைநிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

மேலும், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலத்தின் உரிமையாளர் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு தரப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000  வழங்க கோரி என்எல்சி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த இழப்பீடு தொகையானது வரும் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கூறியதோடு, இதற்கான அறிக்கையை 7ம் தேதி நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க நாளை முதல் இழப்பீடு தொகை வழங்கப்படும் என என்எல்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே, அறிவித்தபடி ரூ.30,000 இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு இருந்தால், மீதமுள்ள தொகை வழங்கப்படும் எனவும், இந்த இழப்பீடு தொகைக்கானகா சோலைகளை சிறப்பு துணை ஆட்சியரை தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம் என என்எல்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு:

விவசாயி முருகன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் எந்த விவசாய பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும், நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது.

அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க உரிய நபர்களை செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்எல்சி தவறிவிட்டது. அதில் பயிரிட்டதும் விவசாயிகளின் தவறு. இதற்கு இரு தரப்பும் சமபங்கு பொறுப்பாவர்கள் என்று நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் தெரிவித்தார்.