கடன் தொல்லையால் நேர்ந்த விபரீதம்! 3 மகள்களை வெட்டிக் கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மங்களபுரத்தில் கடன் தொல்லையால் 3 மகள்களை வெட்டிக் கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

Namakkal - Rasipuram

நாமக்கல் :தமிழகத்தை அதிரவைக்கும் வகையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடன் தொல்லையால் மனமுடைந்த தந்தை கோவிந்தராஜ் (வயது 45), தனது மூன்று மகள்களான பிரக்திஷா ஸ்ரீ (வயது 9), ரித்திகா ஸ்ரீ (வயது 7), மற்றும் தேவஸ்ரீ (வயது 3) ஆகியோரை வெட்டிக் கொலை செய்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிந்தராஜ் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்ததாகவும், அதனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவி & மகனை ஒரு அறையில் பூட்டிவைத்துவிட்டு, 9, 7, 3 வயதுடைய மூன்று மகள்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின், தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டர்.

இச்சம்பவம் நடந்தபோது, அவரது மனைவி பாரதி மற்றும் மகன் அக்னீஸ்வரனை அறையில் பூட்டி வைத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, ராசிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விபரீத முடிவுக்கு கடன் தொல்லையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என மங்களபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சோகச் சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.