#BREAKING : புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்  நியமனம்

புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 30ம் தேதியுடன் (நாளை) தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம்

புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

unknown node

ஜூன் 30ம் தேதியுடன் (நாளை) தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடைகிறது.தற்போது உள்ள தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம்   நியமனம் செய்யப்பட்டுள்ளார்.சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம் ஆகும் .இவர் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.தஞ்சாவூரில் 1985-ஆம் ஆண்டில்  பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.சப் கலெக்டராக  திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பணியாற்றினார்.மேலும் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை  மாவட்ட கலெக்டர் என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.பின் 2010 ஆம் ஆண்டிலிருந்து நிதித்துறை செயலர் பொறுப்பை வகித்து வருகிறார். தமிழ்நாட்டின் 46வது தலைமைச்செயலாளராக வருகின்ற 1  ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் சண்முகம்  .