அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு.!

அதிமுக முன்னாள் அமைச்சர் KP. அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) இன்று மரணம் அடைந்தார். ஜனவரி 18ஆம் தேதி தர்மபுரியில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு

KP Anbalagan

அதிமுக முன்னாள் அமைச்சர் KP. அன்பழகனின் மருமகள் பூர்ணிமா (30) இன்று மரணம் அடைந்தார். ஜனவரி 18ஆம் தேதி தர்மபுரியில் உள்ள தனது வீட்டில் பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது அவரது ஆடையில் தீப்பிடித்ததில் பலத்த தீக்காயம் அடைந்தார்.

இந்த தீ விபத்தில் அவருக்கு 40% மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. அதனையடுத்து வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூர்ணிமா சிகிச்சை பெற்று வந்தார். மேலும், தீ விபத்து சம்பவம் குறித்து வாக்குமூலம் அடிப்படையில் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்றைய (25-01-24) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

இந்த நிலையில, சிகிச்சை பலனின்றி இன்று காலை பூர்ணிமா பரிதாபமாக உயிரிழந்தார். மருமகள்  உயிரிழந்தது அதிமுக முன்னாள் அன்பழகனின் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.