LIVE : மகாத்மா காந்தி நினைவு தினம் முதல் தமிழ்நாடு அரசு போட்ட உத்தரவு வரை!
மகாத்மா காந்தி நினைவு தினம் முதல் தமிழ்நாடு அரசு போட்ட ஒலி மாசுவை கட்டுட்ப்படுத்துவதற்கான உத்தரவு வரை இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.

சென்னை : மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று. இந்த நாளில், சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளையும் நினைவுகூர்ந்து, தியாகிகள் தினமாக சிறப்பு செய்கிறோம்.
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுட்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள், ஆர்டிஓ அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.