தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிப்பு..! எவற்றிற்கெல்லாம் அனுமதி...!

With the full curfew extended again in Tamil Nadu, permission has been granted for all.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், எவற்றிற்க்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2 வாரங்கள் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில், மீண்டும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் எவற்றுக்கெல்லாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.

தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர் வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கும்.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. swiggy , zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டுமே உணவு விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம்போல் இயங்கும்.

ஏடிஎம் மற்றும் அதற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.

வேளாண் விளைபொருட்கள் மட்டும் இடு பொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப்படும்.

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க இப்பதிவு தேவையில்லை.

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்படும்.

unknown node