நாளை முதல் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமல்...!

A full curfew will be imposed in Tamil Nadu for a week from tomorrow without any relaxation.

தமிழகத்தில் எவ்வித தளர்வுகள் இன்றி நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து, 24ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மருத்துவ குழுவினருடனும், சட்டமன்ற கட்சி குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை இரண்டு வாரம் அமல்படுத்தவும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும் மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியது.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில் எவ்வித தளர்வுகள் இன்றி நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அமலாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.