கரையை கடக்கத் தொடங்கியது கஜா...! 110 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது..!

கஜா புயலின் முன் பகுதி  நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.

கஜா புயலின் முன் பகுதி  நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.

இது தொடர்பாக  வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாகையின் கிழக்கே 60 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது.புயலின் கண் பகுதியானது அடுத்த 1 மணிநேரத்தில்  நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும் .அதாவது நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே நள்ளிரவு 12 மணிக்கு கஜா புயல் கரையை கடக்கத்தொடங்கும்.கரையை கடக்கும்போது மணிக்கு100 முதல்110 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும்.

கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 16 கிலோ மீட்டராக உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் கஜா புயலின் முன் பகுதி  நாகைக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கத்தொடங்கியது.புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்று வீசுகிறது  என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.