தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு.! சின்னத்தை வெளியிடும் தமிழக முதல்வர்.!

சென்னையில் அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் தொழில்

Tamilnadu CM MK Stalin

சென்னையில் அடுத்த வருடம் 2024ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் சென்னைக்கு வரவுள்ளன.

இந்த மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்நிலையில், நாளை சென்னையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்த சின்னத்தை (Symbol) முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார்.

கடந்த 2021 மே மாதம் முதல் 2023 மார்ச் வரையிலான காலகட்டத்தில் 3.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின இதனை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் தெரிவிக்கப்பட்டது.

2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.