கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட இலக்கு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Health Minister Ma Subramanian has stated that the target is to vaccinate 100% of the districts adjoining Kerala.

கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் 100% தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்பதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு பாராட்டியதாகவும், ஆகஸ்டில் கூடுதலாக தமிழகத்திற்கு 24 லட்சம் தடுப்பூசி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்திற்கு செப்டம்பரில் 1.04 கோடி தடுப்பூசி தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசால் மாதத்திற்கு இரண்டு கோடி தடுப்பூசிகள் வரை போட முடியும் எனவும், தமிழக மக்கள் தொகையின் அடிப்படையில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா மாநிலத்தின் எல்லையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.