, ,

சாக்லேட் பவுடரில் கடத்தப்பட்ட தங்க நகைகள்.! திருச்சியில் துபாய் பயணி.!

By

திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் துபாய் பயணியிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஒரு பயணியிடம் சுங்கத்துறை அதிகரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த சோதனையில் துபாய் பயணி கொண்டு வந்ததில், சாக்லேட் பவுடருடன் கலந்து தூள் வடிவில் 21.55 லட்சம் மதிப்புள்ள 211 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் மேலும், 175 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டன. தற்போது அவர் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் இருக்கிறார். 

Dinasuvadu Media @2023