சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது.
கடன் வட்டி விகிதங்கள் கால் சதவீதம் உயரக்கூடும் என வெளியானதன் எதிரொலி காரணமாக நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து 45,520-க்கு விற்பனையானது. அதனை தொடர்ந்து இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 45,200-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.40 காசுகள் குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அதைப்போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.