ரூ.26000 தாண்டிய தங்கம் விலை !இரண்டு நாட்களில் ராக்கெட் வேகத்தில் செல்லும் தங்கம் விலை

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.464  உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம்

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.464  உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன்  ரூ.26,168 த்தை தாண்டியது.கடந்த ஜனவரி மாதத்திற்கு பின் தங்கத்தின் விலையானது இத்தகைய உச்சக்கட்டத்திற்கு சென்றுள்ளது.நேற்று  தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.464 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.58 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 20 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3,271-விற்பனை செய்யப்படுகிறது.1 சவரன் தங்கம்: ரூ.26,168 விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி 1 கிராம் : ரூ.41.50 விற்பனை செய்யப்படுகிறது.