பத்திரப்பதிவு முறைகேடு – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு!

Special committee set up to inquire into irregularities committed during the last regime in the securities sector.

பத்திரப்பதிவு துறையில் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு.

கடந்த ஆட்சி காலங்களில் பத்திரப்பதிவு துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்களுடன் இந்த சிறப்பு புலனாய்வு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு, நில மோசடி, வருவாய் இழப்பு, அரசு நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்கள் குறித்து இக்குழு ஆய்வு செய்யும் என்றும் 3 ஆண்டுகளுக்கு செயல்படும் இக்குழு, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்கும் எனவும் கூறியுள்ளது.

மேலும், வருங்காலங்களில் மோசடிகளை தவிர்க்க வழிமுறைகளையும் ஆய்வு செய்து இக்குழு, அரசுக்கு அளிக்கும். பத்திரப்பதிவு துறை தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு புலனாய்வு குழுவில் புகார் அளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.