துணைவேந்தர்களுடன் தமிழக ஆளுநர் ஆலோசனை.!

Governor RN Ravi consults with deputies via video.

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி, ஆராய்ச்சி& மேம்பாடு, கற்றல் அடைவு திறன் மேம்பாடு, உலகளாவிய தரவரிசை பட்டியலில் இடம்பிடித்தல், தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.