சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தனி நபர், நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது!

Government of Tamil Nadu allocates funds to award Green Chief Award to environmentalists.

சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

கடந்த தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், அத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டியிருந்தார்.

அதில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முனைப்புடனும் மற்றும் முன்மாதிரியாகவும் செயல்படும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ‘பசுமை முதன்மையாளர் விருது’ ஒரு கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பிற்கு தற்போது நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node